
தனுஷ் இப்போது பல படங்களை இயக்கி வருகிறார் அந்த வகையில் போன மாதம் வெளிவந்து ஒரு ஓரளவிற்கு நல்லா வரவேற்பு பெற்ற NEEK படத்திற்குப் பிறகு தனுஷ் நடித்து இயக்கி வருகிற IdlyKadai படத்திற்குப் பிறகு என்ன படம் நடிக்கப் போகிறாரா இல்லை இயக்கப் போகிறாரா என ஒரு கேள்வி உள்ளது அந்த வகையில் இப்போது தனுஷ் அடுத்து இயக்கத்தில் இன்னொரு படத்தையும் பார்க்க போகிறோம் என சொல்லும் விதமாக இப்போது ஒரு தகவல் வந்துள்ளது.

தனுஷ் இயக்கத்தில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க முடிவு செய்துள்ளனர் இதற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி மாதம் நடந்து முடிந்தது. இந்தப் படத்தை அஜித் முழு கதையுடன் உருவாக்க சொன்னதாகவும் தெரியவந்துள்ளது இப்போது இந்த கதையை முழுமையாக அஜித் ஏப்ரல் மாதம் தனுஷிடம் கேட்கப் போகிறார்.

இது எல்லாம் சரியாக நடந்தால் இந்த படத்தை இப்போது ஒரு பெரிய நிறுவனம் தயாரிக்க முன்வந்துள்ளது அது என்ன நிறுவனம் என்று பார்க்கும்போது DAWN Pictures என்று சொல்கிறார்கள் இவங்க இப்போது 4 படங்கள் பெரிய ஹீரோவை வைத்து தயாரித்தும் வருகிறார்கள்.
இது எல்லாம் சரியாக நடக்கும் போது கண்டிப்பாக தனுஷ் அஜித் காம்போ எதிர்பார்க்கலாம்.